தீவிரவாதிகள் நடத்தியதைவிட என்னை என் கணவர் மோசமாக நடத்தினார்: கணவன் மீது பாலியல் குற்றம் சாட்டும் ஒரு பெண்! – World News

தீவிரவாதிகள் நடத்தியதைவிட என்னை என் கணவர் மோசமாக நடத்தினார்: கணவன் மீது பாலியல் குற்றம் சாட்டும் ஒரு பெண்!

இந்த செய்தியைப் பகிர்க

தற்போது கனடாவில் வாழும் ஒரு அமெரிக்கப்பெண் தாலிபான் தீவிரவாதிகளிடம் குடும்பத்துடன் சிக்கினார்.

சுமார் ஐந்து ஆண்டுகள் சிறையிருப்புக்கு பிறகு தனது கணவனின் சுயரூபத்தை வெளிப்படுத்தியுள்ளார் அவர்.

தாலிபான்கள் இருக்கும் இடம் எப்படி இருக்கும் என பார்க்கலாம் என்று கூறி தனது மனைவியை அழைத்துச் சென்ற Joshua Boyle என்னும் ஒரு அமெரிக்கர் தாலிபான்களிடம் சிக்கினார்.

தனது மனைவி Caitlan Colemanஉடன் சுமார் ஐந்து ஆண்டுகள் அவர் சிறை வைக்கப்பட்டிருந்தார். பின்னர் மீட்கப்பட்ட அவர்கள் கனடா திரும்பினர்.

தற்போது தனது கணவர் மீது வரிசையாக குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார் Caitlan. தன் கணவர் Joshua, தாலிபான்களின் ஆதரவாளர் என்று கூறியுள்ளதோடு, தாங்கள் சிறை வைக்கப்பட்டிருக்கும்போது தன்னை அவர் பாலியல் வன்புணர்வு செய்தார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார் Caitlan.

விடுவிக்கப்பட்டு கனடா வந்த பின்னரும் தன்னை பாலியல் ரீதியாக Joshua துன்புறுத்துவதாக குற்றம் சாட்டும் Caitlan, தான் சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருந்தபோது தாலிபான் தீவிரவாதிகள் தன்னை நடத்தியதைவிட தனது கணவர் தன்னை மோசமாக நடத்துவதாக தெரிவித்துள்ளார்.

இதனால் கனடா அரசு, Joshua மீது Caitlanஐ தாக்கியது, பாலியல் வன்புணர்வு செய்தது, கட்டாயப்படுத்தி போதைப்பொருள் பயன்படுத்தச் செய்தது மற்றும் சட்ட விரோதமாக கட்டுப்படுத்தி வைத்தது ஆகிய குற்றங்களை சாட்டியுள்ள நிலையில், தன் மீதான குற்றங்களை மறுத்துள்ள Joshua விரைவில் விசாரணைக்குட்படுத்தப்பட உள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Tharsini

Leave a Reply