வெளிநாட்டில் வாழும் நபருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சாதனை தமிழன் ஏ.ஆர் ரகுமான்: வைரலாகும் புகைப்படம் – World News

வெளிநாட்டில் வாழும் நபருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சாதனை தமிழன் ஏ.ஆர் ரகுமான்: வைரலாகும் புகைப்படம்

இந்த செய்தியைப் பகிர்க

அவுஸ்திரேலியாவில் வாழும் சந்தர் என்ற நபருக்கு சமூகவலைதளம் மூலம் ஏ.ஆர் ரகுமான் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

ஆஸ்கார் தமிழன் ஏ.ஆர் ரகுமானுக்கு உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் சந்தர் என்பவர் ஏ.ஆர் ரகுமானின் மிக தீவிர ரசிகராவார்.

எந்தளவுக்கு என்றால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏ.ஆர் ரகுமானை மட்டுமே பின் தொடர்கிறார்.

சந்தர் சமீபத்தில் தனது கனவு வாகனமான பிஎம்டபுள்யூ காரை வாங்கி அதில் I love ARR என பெயர்ப்பலகையில் பொறித்துள்ளார். அதனுடன் அவர் எடுத்த புகைப்படங்களை அவரது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அது வைரலானது.

இதை டுவிட்டரில் பார்த்த ஏ.ஆர் ரகுமான் ‘பார்த்து பத்திரமா ஓட்டுங்க’ என சந்தரின் ட்வீட்டை குறிப்பிட்டு ட்வீட் ஒன்றை பதிவிட்டார்.

இதோடு இன்ஸ்டாகிராமிலும் சந்தரின் புகைப்படத்துக்கு கீழே கமென்ட் செய்திருக்கிறார் ரகுமான்.

இது சந்தருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதையடுத்து ரகுமானின் பதிவுகளை டுவிட்டரில் பகிர்ந்து தனது பேரானந்தத்தை சந்தர் வெளிப்படுத்தி வருகிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Tharsini

Leave a Reply