டிரம்ப் எடுத்த அதிரடி முடிவு.. நெருக்கடிக்கு உள்ளாகும் கனடா – World News

டிரம்ப் எடுத்த அதிரடி முடிவு.. நெருக்கடிக்கு உள்ளாகும் கனடா

இந்த செய்தியைப் பகிர்க

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றதை தொடர்ந்து ஆண்டை நாடான கனடாவில் புகலிடம் கோருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கனடா புள்ளிவிவர நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் கனடாவில் புகலிடம் கோரி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. கணக்கெடுப்பின் படி 2015 ஆம் ஆண்டு 16,058 பேரும், 2016ல் 50,389 பேரும், 2018ல் 55,000 பேரும் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளனர்.

2017ம் ஆண்டு விண்ணப்பித்த 50,389 பேரில், 12,234 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது, 10,930 பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. 27,225 பேரின் விண்ணப்பங்களின் முடிவு நிலுவையில் உள்ளதாக புள்ளிவிவர நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

2017ம் ஆண்டு ஹைய்டி நாட்டை சேர்ந்தவர்கள் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர். ஹைய்டியை தொடர்ந்து நைஜீரியா மற்றும் அமெரிக்கவினர் விண்ணப்பித்துள்ளனர். கரீபியன் நாடுகளில் ஒன்றான ஹைத்தியில் கடந்த 2010ம் சக்திவாய்ந்த பூகம்பம் தாக்கியதை தொடர்ந்து அந்நாட்டு மக்கள் அமெரிக்காவில் தற்காலிகமாக குடியேறினர். இதனையடுத்து, டிரம்ப் அரசாங்கம் தற்காலிக பாதுகாப்பு நிலையிலிருந்து பின்வாங்கியதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஹையத்தியர்கள் அமெரிக்காவிலிருந்து வெளியேறினர்.

அமெரிக்க-கனடா இடையிலான ஒப்பந்தத்தின் படி, புகலிடம் கோருபவர்கள் எந்த நாட்டிற்கு முதலில் வருகிறார்களோ அந்நாட்டிலே புகலிடம் கோரி விண்ணப்பிக்க வேண்டும். எனினும், இது குடியேறுபவர்களுக்குப் பொருந்தாது.

2017ம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற டிரம்ப், அமெரிக்காவில் குடியேற்ற கொள்கையில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்தார் என்பது நினைவுக்கூரதக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Tharsini

Leave a Reply