வெளிநாட்டில் வாழும் இந்தியரின் வலது கையை துண்டிக்க நீதிமன்றம் உத்தரவு… அவர் செய்த குற்றம் என்ன? – World News

வெளிநாட்டில் வாழும் இந்தியரின் வலது கையை துண்டிக்க நீதிமன்றம் உத்தரவு… அவர் செய்த குற்றம் என்ன?

இந்த செய்தியைப் பகிர்க

சவுதி அரேபியாவில் பணத்தை திருடிய வழக்கில் கேரளாவை சேர்ந்த இளைஞரின் வலது கையை துண்டிக்க நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

கேரளாவின் ஆலப்புழாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் சவுதி அரேபியாவின் ஆபா நகரில் உள்ள உணவகத்தில் கடந்த 6 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் அந்த கேரள இளைஞர் சுமார் 1.1 லட்சம் ரியாலை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கேரள இளைஞரை சவுதிக்கு அழைத்து வந்த அவர் நண்பர், திருட்டு போன பணத்தை தான் கொடுத்து விடுவதாக உத்தரவாதம் அளித்த நிலையில் அவரால் அதை தர முடியவில்லை.

பின்னர் பொலிசார் கேரள இளைஞர் அறையில் இருந்து திருடிய பணத்தை கைப்பற்றினார்கள்.

இது தொடர்பாக நீதிமன்ற விசாரணை நடந்து வந்த நிலையில் கேரள இளைஞரின் வலது கையைத் துண்டிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனினும், மே 22-ம் திகதி வரை மேல் முறையீடு செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Tharsini

Leave a Reply