வீடியோவால் நாட்டுக்குள் நுழைய இந்தியருக்கு அனுமதி மறுத்த அவுஸ்திரேலியா – World News

வீடியோவால் நாட்டுக்குள் நுழைய இந்தியருக்கு அனுமதி மறுத்த அவுஸ்திரேலியா

இந்த செய்தியைப் பகிர்க

குழந்தைகள் வன்முறை தொடர்பான வீடியோவை தனது கைப்பேசியில் வைத்திருந்த காரணத்தால் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய இந்தியருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை சேர்ந்த 45 வயது நபர் மலேசியாவின் வழியாக சுற்றுலா விசாவில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார்.

பெர்த் விமான நிலையத்தில் வைத்து இந்தியரின் கைப்பேசியை சோதனை செய்து பார்த்ததில், அது குழந்தைகள் பாலியல் தொடர்பான வீடியோ இல்லை என்றபோதிலும், குழந்தைகள் வன்முறை தொடர்பான வீடியோ என்பதால் அவரை நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.

அவுஸ்திரேலியாவுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் குழந்தைகளை தவறாக சித்தரிக்கும் விதமான காட்சிகளை வைத்திருப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் சுரண்டலில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது.

இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது $525,000 டொலர் அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்திய நபர் நாட்டை விட்டு வெளியேறும் வரை பெர்த் குடியேற்ற மையத்தில் 2 நாட்கள் தங்கவைக்கப்பட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Tharsini

Leave a Reply