100 ஆண்டுகள் பழமையான வீட்டில் 100 ஆவிகளுடன் வாழும் கனடா பெண்: சுற்றுலாப்பயணிகளுக்கும் அனுமதி உண்டாம் – World News

100 ஆண்டுகள் பழமையான வீட்டில் 100 ஆவிகளுடன் வாழும் கனடா பெண்: சுற்றுலாப்பயணிகளுக்கும் அனுமதி உண்டாம்

இந்த செய்தியைப் பகிர்க

கனடாவின் Regina நகரிலுள்ள நூறு ஆண்டுகள் பழமையான ஒரு வீட்டில் 100 ஆவிகள் இருப்பதாக கூறுகிறார் ஆவிகள் குறித்து ஆராய்ச்சி செய்யும் ஒருவர்.

Deb Mathias என்னும் அந்த பெண், வாரத்தில் ஏழு நாட்களும் அந்த வீட்டில் ஆவி நடமாட்டத்தை கருவிகளின் உதவியால் பதிவு செய்து வருகிறார்.

நான் வெறுமனே ஆவிகளுடன் பேசுபவள் அல்ல, என்னால் அவற்றைப் பார்க்க முடியும் என்று கூறும் Deb, என்னால், அவற்றைப் பார்க்க முடியும், அவற்றின் வாசனையை உணர முடியும், அவை நடமாடுவதை கேட்கவும் அவை இருப்பதை உணரவும் என்னால் முடியும் என்கிறார்.

அந்த பழங்கால வீட்டை மாதம் ஒருமுறை சுற்றுலாப்பயணிகளுக்கு திறந்து விடும் Deb, அதன் மூலம் வரும் பணத்தைக் கொண்டு அந்த வீட்டை ஆவிகளுக்கே ஏற்றதாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

13 ஆவிகள் வழக்கமாக வருகை தரும் இந்த வீட்டில், 100 ஆவிகள் இருக்கின்றன என்கிறார் அவர்.

மனிதர்களைப்போலவே ஆவிகளுக்கும் உணர்வுகள் உண்டு என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறும் Deb, அவைகளுக்கு மனிதர்களைப்போலவே தேவைகளும் உண்டு என்கிறார்.

எனவே அந்த வீட்டில் அமைக்கப்பட்டு வரும் மியூஸியம் ஒன்றில், ஆவிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒரு பழைய ரேடியோ, பாலே நடன ஆடுவதற்கேற்ற ஷூக்கள் மற்றும் படங்களையும் வைத்துள்ளார் அவர்.

அந்த ஆவிகள் மக்களால் விரும்பப்படுகின்றன, அவை வரவேற்கப்படுகின்றன என்பதை நினைவூட்டுவதற்காகவே அவை இந்த பொருட்கள் தங்கள் அறையில் வைக்கப்படுவதை விரும்புகின்றன என்கிறார் Deb.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Tharsini

Leave a Reply