பிரித்தானியா இளவரசி மெர்க்கலை கட்டிப் பிடித்த அந்த பெண் யார்? இவருக்கு மட்டும் இப்படி ஒரு அதிர்ஷ்டம்! – World News

பிரித்தானியா இளவரசி மெர்க்கலை கட்டிப் பிடித்த அந்த பெண் யார்? இவருக்கு மட்டும் இப்படி ஒரு அதிர்ஷ்டம்!

இந்த செய்தியைப் பகிர்க

கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி தேவாலயத்திற்கு வந்த போது, இளவரசி மேகன் மெர்க்கலை இளம் பெண் ஒருவர் கட்டிப் பிடித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிரித்தானியாவின் அரசகுடும்பத்தைச் சேர்ந்த வில்லியம்-கேட்மிடில்டன் மற்றொரு இளவரசர் ஹரி-மெர்க்கல் தம்பதி கிறிஸ்துமஸ் தினம் என்பதால் Sandringham பகுதியில் இருக்கும் St Mary Magdalene தேவாலயத்திற்கு வந்தனர்.

அப்போது அரசகுடும்பத்தினரை வரவேற்பதற்காகவும், கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள் தெரிவிப்பதற்காகவும் நுற்றுக்கும் மேற்பட்ட மக்கள் காத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கிருந்தவர்களிடம் கேட் மிடில்டன் மற்றும் இளவரசி மெர்க்கல் பேசினர். அப்போது மெர்க்கலை இளம் பெண் ஒருவர், மிகுந்த அக்கறையோடு கணகளில் கண்ணீர் வடிந்த நிலையில் கட்டி அணைத்தார்.

மெர்கலும் அவரிடம் சாதரணமாக பேசினார். இதனால் பலரும் அங்கிருக்க சரியாக அவரை பார்த்து கட்டிப் பிடித்து பேசும் அவர் யார்? என்பது குறித்து பிரபல ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

அந்த பெண்ணின் பெயர் Jessica Daniels. 17 வயதாகும் இந்த இளம் பெண், மெர்க்கலின் தீவிர ரசிகையாம். ஆம் மெர்க்கலில் அனைத்து சமூகவலைத்தள பக்கங்களை பின்பற்றுபவராம், இதன் மூலமே மெர்கலுக்கும், அவருக்கும் பழக்கும் ஏற்பட்டது.

என்ன தான் சமூகவலைதளங்களில் பேசினாலும், இப்போது தான் இருவரும் முதல் முறையாக சந்தித்துள்ளனர். அப்போது கூட மெர்க்கல், இறுதியாக நான் உன்னை பார்த்தைவிட்டேன், இது அற்புதமான நிகழ்வு என்று அவரிடம் கூறியுள்ளார்.

இது குறித்து Jessica Daniels கூறுகையில், மெர்கலை எனக்கு மிகவும் பிடிக்கும், அவரை நான் சமூகவலைதளங்களில் பின் பற்றி வருகிறேன். அவருடைய பழக்க வழக்கம், மனிதாபிமானம் போன்றவை மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

ஆனால் மெர்க்கலோ, ஹரி திருமணத்திற்கு பின் சமூகவலைத்தள பக்கங்களை பின்பற்றுவதில்லை என்று கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Tharsini

Leave a Reply