கருணாநிதி இறுதிச்சடங்கில் பரபரப்பாக செயல்பட்டு பலரின் பாராட்டை பெற்ற பெண்: யார் அவர் தெரியுமா? – World News

கருணாநிதி இறுதிச்சடங்கில் பரபரப்பாக செயல்பட்டு பலரின் பாராட்டை பெற்ற பெண்: யார் அவர் தெரியுமா?

இந்த செய்தியைப் பகிர்க

கருணாநிதி இறுதிச்சடங்கில் பம்பரம் போல செயல்பட்ட பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி என தெரியவந்துள்ளது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதிச்சடங்குகள் நேற்று மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகில் நடைபெற்றது.

அப்போது ஒரு பெண் அங்குமிங்கும் பம்பரமாக சுழன்று பணிகளுக்கான உதவிகளை செய்தார்.

அப்பெண் கருணாநிதியின் உறவினர் என பலரும் நினைத்திருந்த நிலையில், அவர் பெயர் அமுதா என்பதும் அவர் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்பதும் தெரியவந்துள்ளது.

அமுதா கருணாநிதியின் வழியனுப்பு நிகழ்ச்சி பொறுப்பாளராக நேற்று செயல்பட்டுள்ளார்.

அதாவது கருணாநிதி குடும்ப உறுப்பினர்களிடம் உடல் அடக்கம் செய்வது தொடர்பான அரசு நடைமுறைகளை எடுத்துக்கூறி பரபரப்பாக செயல்பட்டார் அமுதா.

இதோடு 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் திமுக தலைவரின் உடல் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது.

இதன் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக போர்கால அடைப்படையில் செய்து கொடுத்ததோடு இறுதியாக கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவரும் ஒரு பிடி மண்ணையும் அள்ளிப் போட்டார்.

அமுதாவின் செயல் பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளது.

இது குறித்து அமுதா கூறுகையில், காலையிலேயே அரசிடமிருந்து எங்களுக்குத் தகவல் வந்துவிட்டது. அதில், யார் யார் என்னென்ன பணிகளைச் செய்ய வேண்டும் எனப் பட்டியல் போடப்பட்டிருந்தது. எனக்குக் கொடுக்கப்பட்ட பணியானது, சமாதிப் பணிகள் நடக்கும் இடத்தில் வி.ஐ.பி-க்கள், பொதுமக்கள் ஆகியோரை ஒருங்கிணைப்பது.

சமாதிக்குத் தேவையான பொருள்களை வெளியிலிருந்து கொண்டுவந்தோம். நேரம்தான் மிகப் பெரிய சவாலாக இருந்தது.

பெரிய தலைவர்களின் இறுதிச் சடங்குகளில் நான் பங்கேற்பது இது மூன்றாவது முறை. அப்துல் கலாம் மற்றும் ஜெயலலிதாவின் இறுதி நிகழ்வில் நான் பங்கேற்றுள்ளேன்.

இது என்னுடைய உணர்வு. நான் தமிழ்நாட்டில் பிறந்தவள். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் உள்ள உணர்வு எனக்கும் இருக்கிறது. நான் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா என இருவரிடமும் வேலை பார்த்திருக்கிறேன். அவர்கள் இருவருமே என்னுடைய பணியைப் பாராட்டியிருக்கிறார்கள் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Advertisement

Recommended For You

About the Author: Tharsini

Leave a Reply