கருணாநிதியின் கைகளை பிடித்துக் கொண்ட தயாளு அம்மாள்: கலங்கிப் போன உறவுகள்- நெகிழ்ச்சி தருணம் – World News

கருணாநிதியின் கைகளை பிடித்துக் கொண்ட தயாளு அம்மாள்: கலங்கிப் போன உறவுகள்- நெகிழ்ச்சி தருணம்

இந்த செய்தியைப் பகிர்க

காவேரி மருத்துவமனையில் கடந்த 11 நாட்களாக கலைஞர் கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று முதன்முறையாக தயாளு அம்மாள் வருகை தந்தார்.

கருணாநிதியின் இரண்டாவது மனைவியான தயாளு அம்மாளுக்கு, ஸ்டாலின், அழகிரி, செல்வி மற்றும் தமிழரசு என நான்கு பிள்ளைகள்.

கடந்த சில ஆண்டுகளாகவே மறதி நோயால் அவதிப்பட்டு வரும் தயாளு அம்மாவால் யாரையும் நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லையாம்.

இதனால் வீட்டிலேயே முடங்கி கிடந்தவர், முதன்முறையாக நேற்று மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

கருணாநிதியின் உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்ட நிலையில், “அம்மாவை அழைத்து வாருங்கள், அப்பா வெயிட் பண்ணுவார்” என அழகிரி கூறினாராம்.

இதற்கு முதலில் தமிழரசு தயக்கம் காட்டினாலும், தன் மகன் தயா அழகிரியையும் அனுப்பி வைத்துள்ளார் அழகிரி.

இதன்பின்னர் தயாளு அம்மாளை கருணாநிதியின் சக்கர நாற்காலியில் அமரவைத்து, காரில் அழைத்து வந்துள்ளனர்.

கருணாநிதியை பார்த்ததும் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்த தயாளு அம்மாவின் கைகளை கருணாநிதியின் கைகளுடன் பற்றிக் கொள்ளச் செய்துள்ளார் அழகிரி.

இதனை பார்த்துக் கொண்டிருந்த குடும்ப உறவுகள் நெகிழ்ந்து போய் விட்டதாக தெரிகிறது.

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Advertisement

Recommended For You

About the Author: Tharsini

Leave a Reply