8 ஆண்டுகள் தேடுதல் வேட்டைக்குப் பின் சிக்கிய ராட்சஷ முதலை: எவ்வளவு எடை தெரியுமா? – World News

8 ஆண்டுகள் தேடுதல் வேட்டைக்குப் பின் சிக்கிய ராட்சஷ முதலை: எவ்வளவு எடை தெரியுமா?

இந்த செய்தியைப் பகிர்க

எட்டு ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த 600 கிலோ எடை கொண்ட கொலைகார ராட்சஷ் முதலை ஒன்று தற்போது பிடிபட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் உள்ள Katherine நகரில் உள்ள நீர்நிலை ஒன்றில் ராட்சச முதலை ஒன்று கடந்த 2010ஆம் ஆண்டு, முதன் முதலாக தென்பட்டது.

இந்த முதலை அப்பகுதியில் பல மனிதர்களை வேட்டையாடியதால் கொலைகார மிருகமாக கருதப்பட்டது, இதனை பிடிக்க தீவிர நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்ட நிலையில் அது சிக்கவேயில்லை.

இந்நிலையில் 8 ஆண்டுகள் தீவிரமான தேடுதல் வேட்டைக்குப் பின்னர் தற்போது இந்த முதலை வனத்துறையினரால் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது.

4.7 மீட்டர் நீளம், சுமார் 600 கிலோ எடை கொண்ட இந்த முதலைக்கு 60 வயது இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Katherine நகரில் இருந்து 60 கி.மீ தூரத்தில் உள்ள ஓடையில் பிடிக்கப்பட்டுள்ள இந்த முதலை உப்பு நீர் முதலையாகும்.

பிடிபட்ட ராட்சஷ முதலையானது முதலை பண்ணை ஒன்றில் பிற முதலைகளிடமிருந்து தனித்து வைக்கப்பட்டுள்ளது.

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Advertisement

Recommended For You

About the Author: Tharsini

Leave a Reply