கணவருடன் விவாகரத்து! சகோதரருடன் சேர்ந்து தவறான பாதைக்கு சென்ற பெண்.. நேர்ந்த விபரீதம் – World News

கணவருடன் விவாகரத்து! சகோதரருடன் சேர்ந்து தவறான பாதைக்கு சென்ற பெண்.. நேர்ந்த விபரீதம்

இந்த செய்தியைப் பகிர்க

இந்தியாவில் குடிபோதையில் நகைக்காக சகோதரியை கொலை செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தெலங்கானா மாநிலத்தின் சந்தாநகரை சேர்ந்தவர் சீதாலட்சுமி (42). இவர் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் சீதாலட்சுமியின் வீட்டருகில் அவர் சகோதரர் உறவான ரமணா ராவ் (36) என்பவர் வசித்து வந்தார்.

மதுவுக்கு அடிமையான ரமணா அந்த பழக்கத்தை சீதாலட்சுமிக்கும் சொல்லி கொடுத்த நிலையில் இருவரும் தினமும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் போதையில் சீதாலட்சுமி வீட்டுக்கு வந்த ரமணா அவரின் செயினை கழட்டி தரும் கேட்டுள்ளார்.

ஆனால் இதற்கு அவர் மறுத்த நிலையில் சீதாலட்சுமியின் கழுத்தை நெரித்து கொன்ற ரமணா பின்னர் அவரை தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகமாடினார்.

ஆனால் சீதாலட்சுமியின் சகோதரர் சிவக்குமாருக்கு இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாக தோன்றிய நிலையில் பொலிசில் புகார் அளித்தார்.

பொலிசார் ரமணாவிடம் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில் சீதாலட்சுமியை கொலை செய்ததை ஒப்பு கொண்டார்.

இதை தொடர்ந்து அவரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Tharsini

Leave a Reply