இரண்டு வாரம் பொலிசாரை தாக்குப்பிடித்து விட்டீர்களே, அருமை: பாராட்டிய குற்றவாளியின் தந்தை! – World News

இரண்டு வாரம் பொலிசாரை தாக்குப்பிடித்து விட்டீர்களே, அருமை: பாராட்டிய குற்றவாளியின் தந்தை!

இந்த செய்தியைப் பகிர்க

கனடாவில், மூன்று பேரை கொலை செய்துவிட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்ட சந்தேகத்துக்குரிய கொலையாளி ஒருவரின் தந்தை, இரண்டு வாரம் பொலிசாரிடமிருந்து தப்பியதற்காக தனது மகனை பாராட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலியர் ஒருவர், அவரது அமெரிக்க காதலி, கனேடிய தாவரவியலாளர் ஒருவர் என மூன்று பேரைக் கொலை செய்ததாக சந்தேகத்தின்பேரில் தேடப்பட்டு வந்த Bryer மற்றும் Kam McLeod என்னும் இருவர், நெல்சன் ஆற்றின் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.

இந்நிலையில், கொலையாளிகள் என சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்களில் ஒருவரான Bryerஇன் தந்தையான Alan Schmegelsky, தனது மகன் கொலை செய்தான் என்பதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.

தனது மகன் ஒரு சீரியல் கில்லராக இருக்க முடியாது என்று கூறும் Alan, Bryer கடைசியாக தான் ஆல்பர்ட்டாவிற்கு செல்வதாக தனக்கு ஒரு செய்தி அனுப்பியதாகவும், அதற்கு பிறகு அவனிடமிருந்து தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

உண்மைகள் தெரியும் வரை எனது மகன் ஒரு கொலைகாரன் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார் அவர்.

பேட்டி ஒன்றின்போது, நான் உட்கார்ந்து, உங்கள் நாட்டவர் ஒருவரை என் மகன் கொன்றுவிட்டான் என்று கூறிக்கொண்டிருக்க முடியாது, நானும் என் மகனை சாகக் கொடுத்தவன்தான் என்கிறார் அவர்.

சில நாட்களுக்குமுன், கொலை செய்ததாக தேடப்பட்டு வந்த இரண்டு இளைஞர்களும் செக் போஸ்ட் ஒன்றில் காணப்பட்டதாக தகவல் வந்தபோது, அவர்கள் உயிரோடுதான் இருப்பார்கள் என்பது எனக்கு தெரியும், அவர்கள் புத்திசாலிகள், அருமை பையன்களே அருமை என்று அந்த இளைஞர்கள் இருவரையும் Alan பாராட்டியதாக செய்திகள் வெளியாகின.

கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு இளைஞர்களின் உடல்களும் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், ஆய்வுக்கு பின்னரே அவை Bryer மற்றும் Kam McLeodஇன் உடல்கள்தானா, அவர்கள் எப்போது இறந்தார்கள், எப்படி இறந்தார்கள் என்பதுபோன்ற தகவல்கள் தெரியவரும்.

ஆனால் கனேடிய பொலிசாரைப் பொருத்தவரையில், அவர்கள் எந்த விவரங்களையும் வெளிப்படையாக அறிவிக்கமாட்டார்கள் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Tharsini

Leave a Reply