விமானத்தின் கழிவறையில் ரகசிய கமெரா… தெரியாமல் உள்ளே சென்ற பெண் பயணி: அதிரவைக்கும் தகவல் – World News

விமானத்தின் கழிவறையில் ரகசிய கமெரா… தெரியாமல் உள்ளே சென்ற பெண் பயணி: அதிரவைக்கும் தகவல்

இந்த செய்தியைப் பகிர்க

பயணிகள் விமானத்தின் முதல் தர வகுப்பில் இருக்கும் கழிவறையில் ரகசிய கமெராவை வைத்த மலேசிய நபரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

United Airlines நிறுவனத்திற்கு சொந்தமான 646 என்ற பயணிகள் விமானம் San Diego-விலிருந்து Houston பகுதிக்கு புறப்பட்டுள்ளது.

அப்போது இதோ விமானத்தில் முதல் தர வகுப்பில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் விமானத்தில் இருந்த கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு நீல நிற வண்ணத்தில் வெளிச்சம் வந்த படி ஒன்று இருந்துள்ளதைக் கண்டு, உடனடியாக அவர் இது குறித்து விமான ஊழியர்களிடம் தெரிவித்தார்.

அதன் பின் விமான ஊழியர்கள், விமானநிலையம் வந்த பின்னர், அங்கிருந்த அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து அதிகாரிகள் அது குறித்து மேற்கொண்ட விசாரணையில், விமானத்தின் கழிவறையில் நபர் ஒருவர் கமெராவை பொறுத்துவது பதிவாகியுள்ளது.

அந்த நபரும் அதே விமானத்தின் முதல் தர வகுப்பில் தான் பயணம் செய்துள்ளான். இதனால் விமானத்தில் இருக்கும் கமெராவை அதிகாரிகள் ஆராய்ந்து பார்த்த போது, அதில் இருந்த ஒரு பயணியை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.

அவர் தான் இந்த கமராவை பொறுத்தியிருப்பதாகவும், மலேசியா குடியுரிமை கொண்ட லீ என்பவர் தான எனவும் தற்போது Houston-ல் வசித்து வருவதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த நபருக்கு, அபராதம், அல்லது சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இந்த சம்பவம் கடந்த 5-ஆம் திகதி நடந்துள்ளது. விமானநிறுவனம் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளதாக அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி அந்த கமெராவில் இருந்த இரண்டு பெண்களின் வீடியோக்கள் நீக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

,முழு விசாரணைக்கு பின்னரே அந்த நபரைப் பற்றி முழு விபரம் தெரியவரும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Tharsini

Leave a Reply