லண்டனில் மாயமான மக்களிடையே புகழ்பெற்ற அழகிய இளம்பெண்… அவர் குறித்து வெளியான முக்கிய தகவல் – World News

லண்டனில் மாயமான மக்களிடையே புகழ்பெற்ற அழகிய இளம்பெண்… அவர் குறித்து வெளியான முக்கிய தகவல்

இந்த செய்தியைப் பகிர்க

லண்டனில் கடந்த 10 நாட்களாக காணாமல் போயிருந்த யூ-டியூப் புகழ் மரினா ஜோய்ஸ் தற்போது பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அழகு குறிப்புகள் குறித்து அடிக்கடி வீடியோ வெளியிட்டு அதன் மூலம் பிரபலமான மரினாவை 2 மில்லியனுக்கும் அதிகமானோர் சமூகவலைதளத்தில் பின் தொடர்கின்றனர்.

மக்களிடையே பிரபலமாக உள்ள மரினா கடந்த 31ஆம் திகதி திடீரென மாயமானார்.

ஏற்கனவே தான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக மரினா கூறியிருந்த நிலையில் அவர் மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக அவர் வீடியோ ஒன்றையும் முன்னர் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் பத்து நாட்களுக்கு பின்பு அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக லண்டன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மரினாவின் காதலன் பிரண்டன் டுவிட்டரில் தெரிவிக்கையில், அனைத்து விடயங்களும் தொழில்ரீதியான முறையில் கையாளப்படுகிறது.

மரினா பாதுகாப்பாகவும் நன்றாகவும் இருப்பதால் தயவுசெய்து அவளைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.

அவள் மாயமான விடயத்தில் என்னை சந்தேகத்துக்கு உரியவனாக பார்த்தால் அது உங்களுக்கு கிடைத்த தவறான தகவல் மட்டுமே என பதிவிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Tharsini

Leave a Reply