பல் துலக்க கழிவறைக்கு சென்ற குழந்தைகள்… அந்தரத்தில் தொங்கிய மலைப்பாம்பு – World News

பல் துலக்க கழிவறைக்கு சென்ற குழந்தைகள்… அந்தரத்தில் தொங்கிய மலைப்பாம்பு

இந்த செய்தியைப் பகிர்க

அவுஸ்திரேலியாவில் 5 அடி நீல மலைப்பாம்பு ஒன்று கழிவறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நள்ளிரவு உறங்க செல்வதற்கு முன் இரண்டு குழந்தைகள் பல் துலக்குவதற்காக கழிவறைக்கு சென்றுள்ளனர்.

பல் துலக்கிக்கொண்டே எதார்த்தமாக மேலே நிமிர்ந்து பார்த்துள்ளனர். அப்போது 5 அடி நீல மலைப்பாம்பு ஒன்று மேற்கூரையில் இருந்து தொங்கிக்கொண்டிருந்துள்ளது.

இதனை பார்த்ததும் அந்த இரண்டு குழந்தைகளும் அலறியடித்துக்கொண்டு ஒடியுள்ளனர். பின்னர் இந்த தகவல் அப்பகுதியில் பாம்பு பிடிப்பதில் பிரபலமான 23 வயது பிரைஸ் லாக்கெட்டிற்கு கொடுக்கப்பட்டது.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த அவர், யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் பத்திரமாக அங்கிருந்து பிடித்து சென்றார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் இந்த துறையில் 7 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். பொதுமக்கள் பாம்புகளை பார்த்தாலே பயப்படுகின்றனர். ஆனால் நான் வாழ்நாள் முழுவதும் பாம்புகளை பார்ப்பதால் பயப்படுவதில்லை.

எப்படி இருந்தாலும் பாம்பு மேற்கூரையில் மீது தொங்குவது வழக்கத்திற்கு மாறானது என தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Tharsini

Leave a Reply