வெளிநாட்டில் கிடைத்த பணத்தை என்ன செய்தார் தமிழர்? அவருக்கு தண்டனை வழங்கப்பட காரணம் என்ன? – World News

வெளிநாட்டில் கிடைத்த பணத்தை என்ன செய்தார் தமிழர்? அவருக்கு தண்டனை வழங்கப்பட காரணம் என்ன?

இந்த செய்தியைப் பகிர்க

சிங்கப்பூரில் குற்றச்செயலில் ஈடுபட்ட தமிழருக்கு நீதிமன்றம் 3½ ஆண்டு சிறை தண்டனையும், 15 பிரம்படியும் வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

தமிழ்நாட்டை சேர்ந்தவர் முருகேசன் (25). இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சிங்கப்பூருக்கு கட்டிட வேலைக்காக சென்றார்.

அங்கு இவருக்கு சம்பளமாக மாதம் 600 சிங்கப்பூர் டொலர்கள் வழங்கி உள்ளனர். முருகேசன் சம்பள பணத்தை தன்னுடைய பெற்றோருக்கு அனுப்பி வந்தார்.

இந்நிலையில் அங்கு பணிபுரியும் சக ஊழியர்களின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி முருகேசன் அவர்களிடம் இருந்த பணத்தை பறித்தார்.

இதையடுத்து பொலிசார் முருகேசனை கைது செய்து வேனில் அழைத்து சென்ற போது அவர் பொலிசார் மீது எச்சிலை துப்பியும், அவர்களின் கைகளை கடித்தும், தாக்கியும் தகராறு செய்துள்ளார்.

இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த பிறகும் முருகேசன் திருந்துவதாக தெரியவில்லை. ஒரு நாள் மது குடித்துவிட்டு பொதுமக்கள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படும் மார்க்கெட் பகுதியில் உள்ள குப்பைத்தொட்டி, பெஞ்சுகளை சேதப்படுத்தினார். இதுபோன்று 6 குற்ற வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இதுதொடர்பான விசாரணை சிங்கப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

அப்போது முருகேசன் இனி தவறுகளில் ஈடுபடமாட்டேன், மன்னித்து விடுங்கள் என்று கெஞ்சினார்.

அதன் பேரில் நீதிபதி தண்டனையை சற்று குறைத்து, முருகேசனுக்கு 3½ ஆண்டு சிறை தண்டனையும், 15 பிரம்படியும் வழங்க உத்தரவிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Tharsini

Leave a Reply