விமான நிலையத்தில் நடக்க முடியாமல் நடந்து வந்த பெண்: பொலிசார் X-ray கருவியில் கண்ட காட்சி! – World News

விமான நிலையத்தில் நடக்க முடியாமல் நடந்து வந்த பெண்: பொலிசார் X-ray கருவியில் கண்ட காட்சி!

இந்த செய்தியைப் பகிர்க

எல்டராடோ விமான நிலையத்தில் நடக்க முடியாமல் நடந்து வந்த ஒரு பெண்ணைக் கண்டு சந்தேகமடைந்த அதிகாரிகள், அவரை X-ray எடுத்த போது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

கொலம்பியாவைச் சேர்ந்த பெண் ஒருவர், எல்டராடோ விமான நிலையத்தில் கால் வலியுடன் நடப்பது போன்று நடப்பதை கவனித்த அதிகாரிகள் அவரை நெருங்கியதும் அவர் மிரட்சி அடைந்ததை நன்றாகவே கவனிக்க முடிந்திருக்கிறது.

எனவே, அவரை பிடித்து சோதனைக்குட்படுத்தியபோது அவரது தொடையில் தையல் போடப்பட்டிருப்பதைக் கண்டிருக்கிறார்கள்.

அவரை X-ray கருவிக்குட்படுத்தியபோது, அவரது தொடைப்பகுதியில், தோலுக்கும் சதைக்கும் இடையில் ஒரு பை இருப்பது தெரியவர, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.

மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அந்த பையை அகற்றியபோது, அது திரவ கொக்கைன் என்னும் போதைப்பொருள் என்பது தெரியவர, அதிகாரிகள் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.

இப்படி பயங்கரமான முறையில் போதைப்பொருள் கடத்துவது புதிதாக இருக்கிறது, உடலுக்குள் தைத்து வைத்தெல்லாம் கடத்த ஆரம்பித்திருக்கிறார்கள், என்று அதிர்ச்சியுடன் தெரிவிக்கிறார் Lieutenant Wilson Silva என்னும் அதிகாரி.

போதைப்பொருள் கடத்திய அந்த அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவரோ, அந்த பெண்ணே அந்த பையை தொடையைக் கிழித்து உள்ளே வைத்து தைத்திருக்கிறார் என்னும் அதிரவைக்கும் செய்தியை சொல்வதோடு, பொலிசார் அந்த பெண்ணை கண்டுபிடித்து விட்டார்கள்.

இல்லையென்றால் அந்த பை இரத்தக் குழாய்களை அழுத்தி, அவரது உயிருக்கே ஆபத்தாகியிருக்கலாம் என்கிறார் அவர். அந்த போதைப்பொருளின் மதிப்பு 36,733 டொலர்கள் ஆகும்.

இதுபோல் போதைப்பொருளை கடத்த உதவுபவர்களுக்கு ஒவ்வொரு முறையும் 1400 முதல் 3,000 டொலர்கள் வரை கிடைக்கும். அந்த பெண் பொலிசார் மேற்பார்வையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Tharsini

Leave a Reply