பல நாட்களாக மகளின் சடலத்தை விட்டு பிரியாமல் அருகே படுத்திருந்த தாய் – World News

பல நாட்களாக மகளின் சடலத்தை விட்டு பிரியாமல் அருகே படுத்திருந்த தாய்

இந்த செய்தியைப் பகிர்க

பல நாட்களுக்கு முன் இறந்த மகளின் சடலத்தை விட்டு பிரிய முடியாமல், அருகிலேயே அவருடைய தாய் படுத்துறங்கியுள்ள சோக சம்பவம் அவுஸ்திரேலியாவில் நடந்துள்ளது.

அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் எட்வர்ட் – நிக்கோலாஸ் தம்பதியினர். இவர்களுடைய 11 வயது மகள் சோபி அருகாமையில் உள்ள பள்ளியில் படித்து வந்தார்.

எட்வர்ட், மனைவி மற்றும் மகளை தனியாக விட்டு வெளியூரில் தங்கி வேலை செய்து வருகிறார். சில நாட்களாகவே சோபி பள்ளிக்கு வராததால், நிர்வாகத்திலிருந்து பல முறை போன் செய்து பார்த்துள்ளனர்.

ஆனால் நிக்கோலாஸ் எந்த பதிலும் கொடுக்கவில்லை. இதற்கிடையில் எட்வர்ட் கூட பலமுறை போன் செய்தும் பதில் கிடைக்காததால், பக்கத்து வீட்டு நபருக்கு போன் செய்து கவனித்து வருமாறு கூறியுள்ளார்.

உடனே அந்த நபர் நிக்கோலாஸ் வீட்டிற்கு சென்று பார்த்த போது, மர்மமான முறையில் சோபி இறந்து கிடந்துள்ளார். அவருடைய சடலத்திற்கு அருகே உடலில் காயங்களுடன் நிக்கோலாஸும் படுத்து கிடந்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், காயங்களுடன் கிடந்த நிக்கோலாஸை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சோபியின் மரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், சிறுமியின் இறப்பு எந்த சந்தேகத்தையும் ஏற்படுத்தவில்லை. அவருடைய அம்மாவின் உடலில் இருக்கும் காயங்களும் சுயமாக தாக்கிக்கொண்டதாகவே தெரிகிறது என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Tharsini

Leave a Reply