கருகலைப்புக்காக மருத்துவமனை சென்ற பெண்… ஒரு வாரத்திற்கு பின் அவருக்கு காத்திருந்த அதிர்ச்சி – World News

கருகலைப்புக்காக மருத்துவமனை சென்ற பெண்… ஒரு வாரத்திற்கு பின் அவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

இந்த செய்தியைப் பகிர்க

சீனாவில் கருகலைப்பு செய்த பெண் ஒருவர் தொடர்ந்து வயிற்றில் ஏதோ பிரச்சனை இருப்பதை உணர்ந்து மருத்துவமனைக்கு சென்று சோதித்து பார்த்த போது, அவர் வயிற்றில் குழந்தை வளர்வதாகவும், கருகலைப்பு செய்யவில்லை என்ற தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

சீனாவின் Shaanxi மாகாணத்தைச் சேர்ந்த பெண் Zhou என்ற பெண் ஒருவர் கர்ப்பமானதால், அவர் கருகலைப்பு செய்ய முடிவு செய்து அங்கிருக்கும் மருத்துவமனை ஒன்றில் கடந்த ஜுலை மாதம் 10-ஆம் திகதி சென்றுள்ளார்.

அப்போது அவருக்கு மருத்துவர்கள் கருகலைப்பு செய்துள்ளனர். அதன் பின் அவர் வீட்டிற்கு சென்ற பின்பு, ஒருவாராமாக ஏதோ அசெளகரியமாக இருப்பதை உணர்ந்துள்ளார்.

இதனால் வீட்டிற்கு அருகில் இருக்கும் மருத்துவமனையில் சோதித்து பார்த்த போது, நீங்கள் கற்பமாக இருக்கிறீர்கள், கருகலைப்பு ஆகவில்லை என்று கூறியுள்ளனர்.

இதை அவர்கள் அல்ட்ரா சவுண்ட் மூலம் நிரூபித்ததால், அதிர்ச்சியடைந்த அப்பெண் உடனடியாக கருகலைப்பு செய்த மருத்துவமனைக்கு சென்று இதைப் பற்றி கூறியுள்ளார்.

அப்போது கருப்பை செப்டம் எனப்படும் கருப்பையில் பிறவி குறைபாட்டால் இவர் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்துள்ளனர்.

இதனால் அவருக்கு மீண்டும் இலவசமாக மருத்துவமனை கருகலைப்பு செய்து தருவதாக கூறியுள்ளது. இருப்பினும் அவருக்கு இதில் அந்தளவிற்கு சந்தோஷமில்லை என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும் இவர் எத்தானவது வாரத்தில் கருகலைப்பு சென்றார் என்ற தகவலும் தெரிவிக்கவில்லை. கடந்த 1953-ஆம் ஆண்டு முதல் சீனாவில் கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக்கப்பட்டது.

தம்பதிகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற அரசு தடை விதித்ததால், 1980 ல் கருக்கலைப்பு செய்த பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

1983 ஆம் ஆண்டில் சீனாவில் சுமார் 14.37 மில்லியன் பெண்கள் தங்கள் கர்ப்பத்தை நிறுத்தினர்.

சமீபத்திய புள்ளிவிவரங்கள் சீனாவில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 13 மில்லியன் கருக்கலைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

முதலில் ஒரு குழந்தைக்கு மேல் பிறக்க கூடாது என்று கூறப்பட்ட நிலையில், தற்போதுதம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் பிறக்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Tharsini

Leave a Reply