4 வயது பிள்ளையின் கண் முன்னே சொந்த தாயாரின் தலையை வெட்டிய இளம்பெண்: பின்னர் செய்த கொடூர செயல் – World News

4 வயது பிள்ளையின் கண் முன்னே சொந்த தாயாரின் தலையை வெட்டிய இளம்பெண்: பின்னர் செய்த கொடூர செயல்

இந்த செய்தியைப் பகிர்க

அவுஸ்திரேலியாவில் உறவினரின் கண்முன்னே சொந்த தாயாரின் தலையை வெட்டி கொடூரமாக கொலை செய்த இளம்பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் சொந்த தாயாரின் தலையை வெட்டி அண்டை வீட்டாரின் தோட்டத்தில் வீசிய 25 வயது இளம்பெண் மீது பொலிசார் வழக்குப்பதிந்துள்ளனர்.

சிட்னியில் 57 வயது தாயாருடன் குடியிருக்கும் ஜெசிகா காமிலெரி(25) என்பவரே தமது 4 வயது மருமகன் கண்முன்னே சொந்த தாயாரை தலையை வெட்டி கொலை செய்தவர்.

தகவல் அறிந்து பொலிசார் விரைந்து வந்தபோது, ரத்தம் வழிய, மிகவும் அமைதியாக குடியிருப்பின் முன்பு நின்றுள்ளார் ஜெசிகா.

இதனையடுத்து, தடயவியல் சான்றுகளுக்காக ரத்தம் தோய்ந்த அவரது கைகளை பிளாஸ்டிக் கொண்டு சுற்றியுள்ளனர்.

உள்ளூர் நேரப்படி சுமார் 11.40 மணியளவில் நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை அதிகாரிகளுக்கு அவசர தகவல் கிடைத்துள்ளது.

அதில், இரு பெண்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், ஆபத்தில் முடிய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ பகுதிக்கு விரைந்த பொலிசார், அந்த குடியிருப்பின் உள்ளே இருந்து 57 வயதான பெண்மணி ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளனர். சம்பவயிடத்தில் இருந்தே அவரது மகளையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில், மிகவும் கொடூரமான காட்சிகளை பதிவு செய்துள்ளதாக கூறும் பொலிசார், இதன் பின்னணி தொடர்பில் அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Tharsini

Leave a Reply