சொகுசு கப்பலில் ஜன்னலோரம் விளையாடிய ஒரு வயது குழந்தை – தவறி விழுந்து மரணம் – World News

சொகுசு கப்பலில் ஜன்னலோரம் விளையாடிய ஒரு வயது குழந்தை – தவறி விழுந்து மரணம்

இந்த செய்தியைப் பகிர்க

அமெரிக்காவில் கப்பலின் ஜன்னலோரம் அமர்ந்து தனது தாத்தாவுடன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில் உள்ள வல்பரைசோ பகுதியில் வசிப்பவர் சால்வேட்டர் அனெல்லோ. இவர் தனது குடும்பத்துடன் புகழ்ப்பெற்ற ராயல் கரீபியன் நிறுவனத்திற்கு சொந்தமான சொகுசு கப்பலில் பயணம் மேற்கொண்டார்.

இந்த கப்பல் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய பிரம்மாண்ட சொகுசு கப்பல் ஆகும். கப்பல் கடந்த சனிக்கிழமை அன்று கடலில் சென்றுக் கொண்டிருந்தபோது சால்வேட்டர், தனது பேத்தி குளோ வேகண்ட்(1) உடன் விளையாடிக் கொண்டிருந்தார்.

வேகண்ட் உற்சாகமாக அவருடன் விளையாடிக் கொண்டிருந்த வேளையில் சற்றும் எதிர்ப்பாராத விதமாக சால்வேட்டர் கையில் இருந்த வேகண்ட் கீழே விழுந்தாள். அதிர்ச்சியில் அவருக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் திணறி நின்றுள்ளார்.

சால்வேட்டர், கப்பலின் 11வது தளத்தில் இருந்த சன்னலில் வேகண்ட்டினை உட்கார வைத்து விளையாடிக் கொண்டிருந்தார். அவருக்கு பேலன்ஸ் இல்லாததால் குழந்தை கீழே விழுந்துள்ளது.

இந்த சம்பவம் கப்பலில் பயணம் செய்தவர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் சால்வேட்டரிடமும், இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Tharsini

Leave a Reply