பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்துக்கொண்ட ஆஸ்திரேலிய பிரதமர் – World News

பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்துக்கொண்ட ஆஸ்திரேலிய பிரதமர்

இந்த செய்தியைப் பகிர்க

பிரதமர் நரேந்திர மோடியுடன் செல்பி எடுத்துக்கொண்ட ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் ஜி 20 மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் ஒசாகா சென்றார்.

மாநாட்டின் முதல் நாளில் பிரதமர் மோடி, அமெரிக்கா,ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில், மாநாட்டின் இரண்டாவது நாளில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

அந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஸ்காட் மோரிசன், ”மோடி எவ்வளவு சிறப்பான நபர்” என்றும் பதிவிட்டுள்ளார்.

இரண்டாவது நாளிலும் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை மீண்டும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Tharsini

Leave a Reply