உலகப் பொருளாதாரத்தையே திருப்பி போடும் தங்கவிண்கல்… அதன் மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா? – World News

உலகப் பொருளாதாரத்தையே திருப்பி போடும் தங்கவிண்கல்… அதன் மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா?

இந்த செய்தியைப் பகிர்க

விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விண்கல் மட்டும் கிடைத்தால் அனைவரும் கோடீஸ்வரர் ஆகிவிடலாம் என்பது போல் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ,

இத்தாலிய விண்வெளி ஆராய்ச்சியாளரான அன்னிபெல் டிகஸ்பரிஸ் கடந்த 1852-ல் Psyche 16 என்ற விண்கல்லை கண்டுபிடித்தார்.

இந்த விண்கல், செவ்வாய், வியாழன் கிரகங்களின் வட்டப்பாதைகளுக்கு நடுவே சுற்றிக்கொண்டிருப்பதாகவும், இந்தக் கல் முழுவதுமே தங்கம், பிளாட்டினம், இரும்பு, நிக்கல் போன்ற விலைமதிப்புமிக்க தாதுக்கள் நிறைந்திருப்பதாக கூறப்படுகிறது.

இப்படி விலைமதிப்பு மிக்க தாதுக்களை கொண்டிருக்கும் இந்த கல்லின் மொத்த மதிப்பு மட்டும், உலகப் பொருளாதாரத்தையே திருப்பிபோட்டுவிடும் அளவிற்கு இருக்கிறதாம், ஆம் உலகின் மொத்த பொருளாதாரமே £59.5 டிரில்லியன்தான் ஆனால் இந்த கல்லின் மதிப்பு £8,000 க்வாட்டிரில்லியன் என்று கூறப்படுகிறது.

இதனால் இங்கு சுரங்கம் அமைக்கும் நபர் உலகின் முதல் டிரில்லியனர் ஆவர். ஆனால் அத்தனை தங்கம் வரும்போது தங்கம் அதன் மதிப்பையே இழந்துவிடும்.

இன்றைய பொருளாதார முறைகள் அப்படியே தூக்கிவீசப்படும். இந்த விண்கல்லுக்குச் செல்லும் திட்டத்தை தற்போது நாசா உறுதிசெய்திருக்கிறது.

‘Discovery Mission’ என அழைக்கப்படும் இந்தத் திட்டம் 2022-ல் விண்கலம் அனுப்பப்படும். அது 2026-ல் Psyche 16-யை சென்றடையும். ஆனால், இது அறிவியல் ஆராய்ச்சிக்காக மட்டுமே அனுப்பப்படுகிறது. அங்கிருக்கும் தாதுக்கள் எதுவும் சுரண்டி எடுத்துவரப்படாது என்று நாசா தெரிவித்துள்ளது.

ஆனால் சீனாவோ இதற்கு முன் அங்கு சென்றுவிட வேண்டும் என முனைப்பு காட்டிவருவது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Tharsini

Leave a Reply