சவுதி அரேபியாவில் நிரந்தர குடியுரிமை பெற ரூ.1½ கோடி கட்டணம் – World News

சவுதி அரேபியாவில் நிரந்தர குடியுரிமை பெற ரூ.1½ கோடி கட்டணம்

இந்த செய்தியைப் பகிர்க

வெளிநாட்டு தொழிலாளர்கள் சவுதி அரேபியாவில் நிரந்த குடியுரிமை பெற 8 லட்சம் ரியால் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1½ கோடி) கட்டணம் செலுத்தும் சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

அரபு நாடுகளில் மிகப்பெரிய நாடான சவுதி அரேபியா கச்சா எண்ணெய் தவிர்த்து வேறு முறைகளில் வருமானத்தை பெருக்கும் நோக்கில் வெளிநாட்டுக்காரர்கள் நிரந்த குடியுரிமை பெறுவதற்கான சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. தற்போது, பல்வேறு நாடுகளை சேர்ந்த ஒரு கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து கட்டணம் வசூல் செய்து, வருமானத்தை ஈட்ட இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

அதன்படி வெளிநாட்டு தொழிலாளர்கள் சவுதி அரேபியாவில் நிரந்த குடியுரிமை பெற 8 லட்சம் ரியால் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1½ கோடி) கட்டணம் செலுத்த வேண்டும். அதே போல் ஓராண்டுக்கு மட்டும் சவுதி அரேபியாவில் வசிக்க, 1 லட்சம் ரியால் (ரூ.19 லட்சம்) கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், அதனை புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.இதற்கான ‘ஆன்லைன்’ விண்ணப்ப பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது. சவுதி அரேபியாவில் பல ஆண்டுகளாக குடியுரிமை பெறாமல் வசிப்பவர்கள், நீண்ட கால அடிப்படையில் தொழில் செய்ய முயற்சிக்கும் பெரிய நிறுவனங்களுக்கு இந்த திட்டம் பயனளிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Tharsini

Leave a Reply