ஊருக்குள் வந்த10 அடி நீள ராஜநாகம் – பத்திரமாக மீட்ட வனத்துறை – World News

ஊருக்குள் வந்த10 அடி நீள ராஜநாகம் – பத்திரமாக மீட்ட வனத்துறை

இந்த செய்தியைப் பகிர்க

மேட்டுப்பாளையம், புளியமரம் கிராமத்தில் 10.3 அடி நீளமுள்ள ராஜ நாகம், 4.9 அடி நீளமிருந்த மலைப்பாம்பு இரண்டையும் வனத்துறையினர் நேற்று மதியம் சுமார் 1.30 மணியளவில் மீட்டனர்.

குன்னூர் சாலையில் ரயில்வே கேட்டை அடுத்து இடதுபுறம் புளியமரம் கிராமம் அமைந்திருக்கிறது. அங்கு மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மருதவழி வாய்க்கால் என்ற பகுதியில் வாய்க்கால் ஓரத்தில் ஒரு மலைப்பாம்பு இருப்பதைக் கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், அதைத்தொடர்ந்து சுமார் 10 அடி நீளத்துக்கு இருந்த ராஜ நாகம் ஒன்று மலைப்பாம்பை வேட்டையாட வந்துள்ளது. அதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் வனத்துறைக்குத் தெரிவிக்கவே அவர்கள் அந்த இடத்துக்கு விரைந்தார்கள்.

கண்டங்கண்டை நீர்க்கோலி பாம்பு vs மரத்தவளை

கண்டங்கண்டை நீர்க்கோலி பாம்பு vs மரத்தவளைகண்டங்கண்டை நீர்க்கோலி (Checkered Keelback) என்ற ஒருவகை தண்ணீர் பாம்பு, ஒரு மரத்தவளையை வேட்டையாடிக் கொண்டிருந்தது. அந்தத் தவளையும் தான் இன்றைய உணவாகிவிடக் கூடாதென்று இயன்றவரை போராடிக் கொண்டிருந்தது. இந்தப் போராட்டத்தின் முடிவில் தவளை தப்பித்ததா இல்லையா?விரிவாகப் படிக்க: http://bit.ly/2YQ3Xdg

Gepostet von சுற்றமும் சூழலும் am Sonntag, 26. Mai 2019

மேட்டுப்பாளையம் வனச் சரக அலுவலர் செல்வராஜ் தலைமையில் வந்த வனப் பணியாளர்கள் குழு நேற்று மதியம் சுமார் 2.30 மணியளவில் இரண்டு பாம்புகளையும் மீட்டனர். 4.9 அடி நீளமிருந்த மலைப்பாம்பையும் 10.3 அடி நீளமிருந்த ராஜ நாகத்தையும் பத்திரமாக மீட்டனர். குடியிருப்புப் பக்கம் வராத, வாய்க்கால் ஓரத்தில் சுற்றிக்கொண்டிருந்த இரண்டையும் மீட்க வேண்டிய தேவை என்ன என்று மீட்புக்குழுவைச் சேர்ந்த வனச் சரக அலுவலர் செல்வராஜிடம் கேட்டோம், “அது வனப்பகுதிக்கு வெளியே விவசாய நிலத்தின் வழியாகச் செல்லும் வாய்க்கால். இங்கு பல விவசாயிகள் தொடர்ந்து சென்றுவருகிறார்கள். இந்த இரண்டு பாம்புகளுமே வனத்துக்குள் மட்டுமே வாழக்கூடியது. தற்போது வெளியில் வாய்க்கால் வழியாக வந்துவிட்டது. இதில் ராஜநாகம் அரிதானது மற்றும் மிகக் கொடிய விஷமுள்ளது. ஆகவே, மக்களுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாமலிருக்கவும் பாம்புகளை அவற்றின் வாழிடத்திலேயே கொண்டுசேர்க்கவும் இந்த மீட்பு தேவையாக இருந்தது” என்று கூறினார்.

இரண்டுமே பெண் பாம்புகள் என்பது மீட்கப்பட்ட பின்னர் நடந்த பரிசோதனையில் தெரியவந்தது. அவை ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்த பின்னர் வனத்துறை, இரண்டையும் கல்லார் காப்புக் காட்டுக்குள் விடுவித்தனர்.

Advertisement

Recommended For You

About the Author: sudar

Leave a Reply