ஐந்து குழந்தைகளைக் கொன்று புதைத்த தாய்: அதற்கு அவர் கூறிய காரணம்! – World News

ஐந்து குழந்தைகளைக் கொன்று புதைத்த தாய்: அதற்கு அவர் கூறிய காரணம்!

இந்த செய்தியைப் பகிர்க

பிரான்சில் ஒரு பெண், தனக்குப் பிறந்த ஐந்து குழந்தைகளை கொன்று புதைத்ததோடு, அவற்றை குழந்தைகளாக ஏற்றுக்கொள்ள தனக்கு மனம் வரவில்லை என்று கூறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2003ஆம் ஆண்டு Galfingue வனப்பகுதியில் குப்பை போட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்ட நான்கு குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

அவை குறித்து எந்த தடயமும் கிடைக்காததால் அந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது. பின்னர் DNA சோதனை முறைகள் புழக்கத்திற்கு வந்தபின், 2016இல் மீண்டும் கோப்புகள் தூசு தட்டப்பட்டு வழக்கு விசாரணை தொடங்கியது.

இதற்கிடையில் Wittelsheimஐச் சேர்ந்த Sylvie Horning (55) என்ற பெண் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சண்டையிட்டது தொடர்பாக அவரது DNA சேகரிக்கப்பட்டது.

தற்செயலாக அந்த DNA மாதிரியை ஆய்வு செய்யும்போது, அது, 2003ஆம் ஆண்டு Galfingue வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளின் உடல்களின் DNAவுடன் ஒத்துப்போக, பொலிசாரின் பார்வை Sylvie மீது திரும்பியது.

1990க்கும் 2005க்கும் இடையில் ஐந்து குழந்தைகளை கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில், 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் Sylvie கைது செய்யப்பட்டார்.

விசாரணையில் அந்த குழந்தைகளை குழந்தைகளாக ஏற்றுக்கொள்ள தனது உடலும் மனமும் ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறிய Sylvie, ஒவ்வொரு முறை கர்ப்பமான போதும் அதை தன் கணவரிடமிருந்து கூட மறைத்ததாகவும், ரகசியமாக குளியலறையில் பிரசவித்து, ஒவ்வொரு குழந்தை பிறந்தபோதும் அதை கழுத்தை நெறித்துக் கொன்று விட்டதாகவும் தெரிவித்தார்.

கொல்லப்பட்ட ஐந்தாவது குழந்தையின் உடல், அவரது வீட்டிலுள்ள ஒரு ப்ரீசரில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Sylvieயின் கணவர் மரணமடைந்து விட்ட நிலையில், அவர் செய்த கோர செயல்களைக் கண்டு அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த அவரது மூன்று வளர்ந்த பிள்ளைகளும், அவர் எங்களுக்கு தாயே இல்லை என கூறிவிட்டனர்.

ஐந்து குழந்தைகளைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள Sylvieக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்குமாறு அரசு தரப்பு வழக்கறிஞர் நேற்று கேட்டுக் கொண்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Tharsini

Leave a Reply