உலகிலேயே தலைசிறந்த உணவகம் எந்த நாட்டில் உள்ளது தெரியுமா? – World News

உலகிலேயே தலைசிறந்த உணவகம் எந்த நாட்டில் உள்ளது தெரியுமா?

இந்த செய்தியைப் பகிர்க

உலகிலேயே தலைசிறந்த உணவகம் என்னும் புகழை சுவிட்சர்லாந்திலுள்ள உணவகம் ஒன்று பெற்றுள்ளது.

Elite Traveler என்னும் பிரபல பத்திரிகை, உலகின் தலைசிறந்த 100 உணவகங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் de Ville de Crissier என்னும் உணவகம் கடந்த ஆண்டு இருந்த இடத்திலிருந்து எட்டு இடங்கள் முன்னேறி முதலாவது இடத்தை பிடித்துள்ளது.

உலகெங்கும் தனியார் ஜெட் நிறுவனங்களில் விநியோகிக்கப்படும் இந்த பத்திரிகையின் வாசகர்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

பிரெஞ்சு உணவுகளை தயாரிக்கும் இந்த உணவகம் லாசேனுக்கு அருகிலுள்ள Crissier என்னும் இடத்தில் அமைந்துள்ளது.

இந்த பட்டியலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை அமெரிக்க உணவகங்கள் பிடித்துள்ள நிலையில், பிரித்தானிய உணவகம் ஒன்று 11ஆவது இடத்தை பிடித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Tharsini

Leave a Reply