புலம்பெயர்ந்தோருக்காக வெளிநாட்டு தலைவரிடம் கெஞ்சிய கனேடிய பிரதமர்! உண்மை என்ன? – World News

புலம்பெயர்ந்தோருக்காக வெளிநாட்டு தலைவரிடம் கெஞ்சிய கனேடிய பிரதமர்! உண்மை என்ன?

இந்த செய்தியைப் பகிர்க

நைஜீரியா ஜனாதிபதியிடம் ஒரு மில்லியன் புலம்பெயர்ந்தோரை கனடாவுக்கு அனுப்ப பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கெஞ்சியதாக வெளியான செய்தியின் உண்மைத்தன்மை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான தகவல் ஒன்று நைஜீரியாவில் பரவலாக கவனத்தை ஈர்த்ததை அடுத்தே, கனேடிய நிர்வாகம் அந்த செய்தியின் உண்மைத் தன்மை தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளது.

மட்டுமின்றி புலம்பெயர்ந்தோருக்காக கனேடிய அரசு வேலை வாய்ப்பையும், குடியேறிகளுக்கான புதிய திட்டங்களையும் வகுத்து வருவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தனர்.

ஆனால் ட்ரூடோ, இதுபோன்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டது இல்லை எனவும், நைஜீரிய ஜனாதிபதியுடன் இந்த விவகாரம் தொடர்பில் விவாதித்தது இல்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

நைஜீரியாவில் இந்த செய்தியானது குறிப்பிட்ட நாளேட்டில் சுமார் 2,600 முறை பகிரப்பட்டுள்ளது. மட்டுமின்றி பிரான்ஸ் மஞ்சள் அங்கி போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டுவரும் கனேடிய மஞ்சள் அங்கி குழுவினரின் கோபத்திற்கும் இரையாகியுள்ளது.

பேஸ்புக்கில் மட்டுமின்றி, வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகளிலும் பெருமளவு பகிரப்பட்டுள்ளது. ஆனால் இதன் எண்ணிக்கையானது கணக்கிடப்படவில்லை என கூறப்படுகிறது.

குறித்த செய்தியானது கனடா தொடர்பில் மட்டுமின்றி, பிலிப்பைன்ஸ், சாம்பியா, ஜிம்பாப்வே, பாகிஸ்தான், கானாமற்றும் உகாண்டா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் நைஜீரிய ஜனாதிபதியிடம் கெஞ்சியதாக கூறப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Tharsini

Leave a Reply