4 ஆண்டுகள் கடும் சித்திரவதை: சவுதி இளைஞரின் மரண தண்டனையை எதிர்க்கும் ஆஸ்திரியா – World News

4 ஆண்டுகள் கடும் சித்திரவதை: சவுதி இளைஞரின் மரண தண்டனையை எதிர்க்கும் ஆஸ்திரியா

இந்த செய்தியைப் பகிர்க

சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இளைஞருக்கு ஆதரவாக ஆஸ்திரியா அரசு முக்கிய நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சவுதி அரேபியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த கிளர்ச்சியின்போது இருசக்கர வாகன போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் Murtaja Qureiris.

அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இந்த கிளர்ச்சியில் கலந்துகொண்ட பலர் கைதான நிலையில், அப்போது 13 வயதான Murtaja Qureiris என்ற சிறுவனும் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் சுமார் 8 ஆண்டுகளுக்கு பின்னர் விசாரணை முடிவடைந்ததையடுத்து முர்தஜாவுக்கு சவுதி நீதிமன்றம் மரண தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

உலக அரங்கில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பில் சவுதி அரேபியாவுக்கு அழுத்தம் தர ஆஸ்திரியா அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் ஒருபகுதியாக சவுதி அரேபியாவின் நிதியுதவியுடன் ஆஸ்திரியாவில் செயல்படும் மதம் தொடர்பான மையங்களை மூட நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பில் ஆஸ்திரியா நாடாளுமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதில், அந்த இளைஞரின் மரணதண்டனையை தடுக்க அனைத்து அரசியல் மற்றும் இராஜதந்திர வழிமுறைகளை பயன்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.

மட்டுமின்றி, எந்த நிபந்தனைகளும் இன்றி இளைஞர் Murtaja Qureiris-ஐ விடுதலை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

10 வயதில் தமது 30 தோழர்களுடன் அரசுக்கு எதிரான மிதிவண்டி போராட்டத்தில் கலந்துகொண்ட Qureiris, மூன்றாண்டுகளுக்கு பின்னர் 13-வது வயதில் கைது செய்யப்பட்டார்.

பின்னர் நீண்ட 4 ஆண்டுகள் கடும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு, தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். சவுதி வரலாற்றில் மிக இளவயது அரசியல் கைதி என கருதப்பட்டவர் Murtaja Qureiris.

Murtaja Qureiris மட்டுமின்றி, அவரது சகோதரர்கள், தந்தை என குடும்பத்தில் முக்கியமானவர்கள் அனைவரும் தற்போது அரசுக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள் வரிசையில் கைதாகி சிறையில் உள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Tharsini

Leave a Reply